OurUmmah.org

One World One Ummah

OurUmmah.org இன் சிறப்பு பதிவுகள்

நைஜீரியா அரசப் படை  படுகொலைகள் -Execution-style killing

Written by poralikall

January 30, 2010 at 8:18 pm

உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்

leave a comment »

OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள்  உஸாமா பின்லாதின் உட்பட நாள்வரை கொலைசெய்தனர். உஸாமாவின் இரகசிய இடம் தொடர்பான முக்கிய தகவலை அமெரிக்க CIA முகவராக செயல்பட்டு ஒரு குழுவை இயக்கி வந்த அப்ரிடி என்பவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் Read the rest of this entry »

Written by poralikall

January 28, 2012 at 10:22 pm

மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்: மீள்பதிவு

leave a comment »

அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம்
OurUmmah: பிரான்ஸில்  கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது. விரிவாக…

Written by poralikall

January 28, 2012 at 9:02 pm

எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக  நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும்  மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video விரிவாக…

Written by poralikall

January 24, 2012 at 11:54 pm

எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235 ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில்  வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி  25 வீததிற்கு நெருக்கமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 125 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 22, 2012 at 8:25 pm

இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?

leave a comment »

OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர் .

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு இராணுவப்புரட்சி முயற்சிக்கு பிறகு இராணுவத்திற்கும், ஷேக் ஹஸீனா அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளதை Read the rest of this entry »

Written by poralikall

January 20, 2012 at 8:20 pm

அடுத்து ஈரானை தாக்க அமெரிக்கா சந்தர்பம் தேடுகிறதா ?

leave a comment »

OurUmmah: “ஈராக் , ஆப்கானிஸ்தான் அடுத்து அமெரிக்கா கால் வைக்க தீர்மானித்துள்ள நாடு ஈரானாக இருக்கலாம்” என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தொடராக கருத்துரைத்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்கா ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க சட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ஈரானும் அணு ஆயுதம் தயாரிப்பதாக யுரேனியம் செரிவாக்களை தான் செய்வதாக தெரிவித்துள்ளது, அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து Read the rest of this entry »

Written by poralikall

January 15, 2012 at 8:53 pm

எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஹிஜாபுடன் தொலைகாட்சி நிகழ்சி நடத்த அனுமதி

leave a comment »

OurUmmah:  எகிப்து அரச தொலைகாட்சிகளில் பெண்கள் ஊடகவியலாளர்கள்  நிகழ்சிகளை நடத்தும்போது ஹிஜாப் அணிய பல ஆண்டுகளாக இருந்து வந்த தடைக்கு எதிராக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப்புடன் தொலைகாட்சிகளில் நிகழ்சிகளை நடத்த உரிமை பெற்றவர்கள் என்று  எகிப்தின் வரலாற்றில் முதல் தடவையாக நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.

எகிப்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் எந்த பெண்ணும் ஹிஜாபுடன் நிகழ்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது இதனால் பல பெண்கள் தமது வேலைகளை தூக்கி எறிந்துள்ளனர். Read the rest of this entry »

Written by poralikall

January 12, 2012 at 9:56 pm

ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை

leave a comment »

OurUmmah: ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி கார் குண்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நதான்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள யுரேனிய செறிவாக்கல் மையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷன் இன்று படுகொலைச் செய்யப்பட்துள்ளார் இவரது கொலையின் பின்னணியில் மொசாத், இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

January 11, 2012 at 10:57 pm

எகிப்தில் மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் அன் நூர் கட்சி ஆகியன 62.2.வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்று எகிப்தின்  தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது . இது தவிர மற்றுமொரு இஸ்லாமிய கட்சியான அல் வசத் என்ற கட்சி 2 வீதமான வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகளின் படி Read the rest of this entry »

Written by poralikall

January 8, 2012 at 9:00 pm

பிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்கி முன்னாள் இராணுவ தளபதி கைது

leave a comment »

OurUmmah: துருக்கி முன்னாள் இராணுவ தளபதி இன்று வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கதை கவிழ்க்க பயங்கரவாத அமைப்பு ஒன்றை வழிநடத்தி வந்தார் என்ற குற்றசாட்டின் கீழ் ஜெனரல் இல்கர் பாஸ்புக் என்ற முன்னாள் இராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள அதி உயர் இராணுவ அதிகாரியாக இவர் உள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

January 6, 2012 at 9:26 pm

எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இறுதி சுற்று தேர்தல் நடைபெறுகிறது

leave a comment »

OurUmmah: எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல்  நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும் சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது . Read the rest of this entry »

Written by poralikall

January 4, 2012 at 9:34 am

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுக்கு துருக்கியிலும் அமோக வரவேற்பு

leave a comment »

OurUmmah: பலஸ்தீன காஸா பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா நேற்று துருக்கி சென்றுள்ளார் துருக்கி சென்றுள்ள அவருக்கு துருக்கி மக்கள் அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர் , துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் அவருக்கு விசேட வரவேற்பு வழங்கியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் பல விடயங்கள் கலந்தாலோசிக்ப்பட்டுள்ளது. இதன்போது காஸாவுக்கான விசேட உதவி திட்டம் ஒன்றை துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

January 2, 2012 at 10:51 pm

இஹ்வான்களின் மேரி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

with 14 comments

OurUmmah: புத்தாண்டில் கிறிஸ்தவ மக்களை வாழ்த்துவதற்காக இஹ்வான் அமைப்பு பிரதித்தலைவர் டாக்டர் மெஹ்மூத் இஸ்ஸத் தலைமையில் உயர் மட்ட உறுபினர்களை கொண்ட குழுவை தேவாலயங்களுக்கு அனுப்புயுள்ளது. புத்தாண்டு தினத்தில் தேவாலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உயர் மட்ட குழுவினர் கிஸ்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த கிரிஸ்மஸ் பண்டிகையின் போது இஹ்வான் FJP தேவாலயங்களுக்கு சென்று தமது மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .படங்கள் Read the rest of this entry »

Written by poralikall

January 1, 2012 at 8:56 pm

ஆப்கான் தாலிபான் அமெரிக்காவின் எதிரியல்ல: அமெரிக்கா

leave a comment »

OurUmmah: தலிபான் இயக்கத்துடன் பேசப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா அரசாங்க அறிக்கை ஒன்று ஆப்கான் தாலிபான் இயக்கம் அமெரிக்காவின் எதிரியல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேச்சுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக தகவகள் தெரிவிக்கின்றது.

இதேவளை தாலிபான் அமைப்பு கட்டாரில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டேன் என்று ஆப்கான் கர்சாய் தெரிவித்துள்ளார் , கட்டாரில் துறக்கப்படவுள்ள தாலிபான் அலுவலகம் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

January 1, 2012 at 8:00 pm

Posted in Uncategorized

இமாம் யூசுப் அல் கர்ழாவியின் கண்டனம்

with one comment

OurUmmah: நைஜீரியாவில் கிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச சர்வதேச ஜம்இயதுல் உலமா சபையின் தலைவரான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் யார் நடத்தினார்கள் என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது இதற்கு முன்னரும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது அவை சில இஸ்லாமிய அமைப்புகள் அதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டபோதும் நாட்டின் இராணுவ உளவு அமைப்புதான் இதற்கு காரணம் என்று ஆதாரங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Written by poralikall

December 31, 2011 at 9:27 pm

ஹமாஸ், இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவுதான்: ஹனியா

with 4 comments

OurUmmah: பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை ஹமாஸ் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் உள்ள இணைப்பை மறைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார் .Video Read the rest of this entry »

Written by poralikall

December 28, 2011 at 10:35 am

எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்

with 8 comments

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. இதற்கு பதில்வழங்கியுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு யாப்பை வரைய முன்னர் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்தால் அவர் ஹுஸ்னி முபாரக்கை விடவும் சர்வாதிகாரதன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

December 27, 2011 at 8:56 pm

கடும்போக்காளர் பூட்டினுக்கு எதிரான மீண்டும் ஆர்பாட்டம்

leave a comment »

OurUmmah: ரஷ்யாவில் மீண்டும் ஆர்பாட்டம் வெடித்துள்ளது அந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிர கணக்கானவர்கள்  கலந்து கொண்துள்ளனர். அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூடின் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மிஹாலி கோபர்சேவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் கண்டித்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

December 25, 2011 at 5:54 pm

அமைதியான தேர்தலும் ஆர்பாட்டமும்

leave a comment »

OurUmmah: எகிப்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நூற்றுக் கணக்கானவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்துள்ளனர். எகிப்தில் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறபோதும் தேர்தலில் முதல் கட்டம் ஆரம்பம்  முதல் சிலர் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் எகிப்தில் பாராளுமன்ற தேர்தலின் இரண்டு கட்டங்கள் அமைதியான முறையில் அதி கூடிய மக்களின் வாக்களிப்புடன் இடம்பெற்று இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பெரும்தொகை வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

December 22, 2011 at 8:29 pm

Posted in Uncategorized

எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளை கைப்பற்றியுள்ளது

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது என்று உத்தியோக பூர்வமற்ற எகிப்தின் தேசிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றது .முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு வாக்குகளுக்கும் அதிகமான 61 வீதமான வாக்குகளை பெற லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் சுற்று தேர்தலுக்கான வாக்கெடுப்பு கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி முடிவுற்றது அதில் இரண்டு பிரதான இஸ்லாமிய அரசியல் கட்சிகளான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சிக்கும் ஸலபிகள் அமைப்பின் Read the rest of this entry »

Written by poralikall

December 18, 2011 at 9:25 pm

இன்று ஈராக்கில் இருந்து வெளியேறுவது அமெரிக்காவின் கடைசி பேய்யா ?

with one comment

OurUmmah: ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு அழிவு நாசவேளை செய்துகொண்டிருந்த அமெரிக்க  தாக்குதல் பேய்களின் கடைசி அணி இன்று ஈராக்கில் இருந்து வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆனால் ஈராக்கில் இன்னும் பல ஆயிரம் இராணுவ பிசாசுகள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது அந்த பேய்கள் இரண்டு முகாம்களில் சுமார் 4000 பேய்கள் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஏகாதிபத்திய அமெரிக்கா கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது ஆக்கிரமிப்பு படையெடுத்து , ஈராக்கை அழித்து நாசம் செய்து சர்வாதிகாரி சதாம் ஹுசைன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய பொம்மை அரசு ஒன்றை அமைப்பதில் வெற்றி பெற்றது. Read the rest of this entry »

Written by poralikall

December 18, 2011 at 4:32 pm

Posted in ஈராக்

எகிப்தில் இரண்டாம் சுற்று தேர்தல் ஆரம்பம்

leave a comment »

OurUmmah: எகிப்தில் புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான இரண்டாம் சுற்று தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது.அத்தேர்தலில் மற்றும் நீதிக்கும் விடுதலைக்குமான கட்சி 36.6 சதவீத வாக்குகளையும் அன் நூர் 24.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

December 15, 2011 at 8:59 pm

அமெரிக்க உளவு விமானம் தவறி விழ வில்லை தரை இறக்கினோம் :Video

with one comment

OurUmmah: அமெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை மறைமுகமாக அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தரையிறக்கும் கட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இப்படி கூறுகிறார் எமது US RQ-170 உளவு விமானம், ஈரானில் விழுந்து விட்டது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை எம்மிடம் திருப்பித் தரவேண்டும் என்று தெரிவிக்கிறார். Read the rest of this entry »

Written by poralikall

December 14, 2011 at 5:42 pm

உளவு விமானத்தை திருப்பித் தரமுடியாது:ஈரான்

leave a comment »

OurUmmah: நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது’ என, ஈரானின் புரட்சிப் படை உறுதியாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. அது தொடர்பான வீடியோ வையும் ஈரான் வெளியிட்டது Read the rest of this entry »

Written by poralikall

December 12, 2011 at 8:50 pm

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு

leave a comment »

OurUmmah: ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. அரபு லீக் அனுசரனையுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மஸ்ஜிதுல் குதுஸ், மீதான அத்துமீறல்கள், மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளால் புனித ஜெருசலம் நகரில் சுகாதார, கல்வி துறைகளில் ஏற்பட்டு வரும் தாக்கம் தொடர்பிலும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பிலும் அங்கு ஆராயப்படவுள்ளது என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றது.

Written by poralikall

December 11, 2011 at 7:58 pm

தொடரும் கடும்போக்காளர் பூட்டினுக்கு எதிரான ஆர்பாட்டங்கள்

leave a comment »

OurUmmah: கடந்த 20 ஆண்டுகளில், ரஷ்யா வரலாறு காணாத அளவிற்கு, தேர்தல் முறைகேடுகளை கண்டித்து, நேற்று சனிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பல்லாயிர கணக்கான மக்கள கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. ரஷ்யாவில் கடந்த 4ம் தேதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள், மோசடிகள் நிகழ்ந்துள்ளது இது நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் இல்லை. இந்த தேர்தல் முழுமையாக பிரதமர் விளாடிமிர் பூட்னின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு ஆதரவாக நடத்தப்பட்டது என்று பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்தவன்னமுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

December 11, 2011 at 7:33 pm

எதிர்பார்க்கப்பட்ட எகிப்திய ஜனநாயக சக்திகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான முறுகல்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் ஜனநாயக சக்திகளுக்கும் இராணுவ நிர்வாகத்திற்கும் இடையில் முறுகல் நிலை மேலும் அதிகரித்து வருகின்றது. தற்போது இராணுவ நிர்வாகம் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள்  இராணுவ நிர்வாகத்தின் எதார்த்தத்தை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை எகிப்தின் இடைக்கால இராணு நிர்வாக உறுப்பினர் மேஜர் ஜெனரல் முக்தார் அல் முல்லா வெளியிட்ட கருத்துக்கள் மேலுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ”புதிதாக அமையப்போகும் எகிப்தின் பாராளுமன்றம் பறந்த அளவில் எகிப்தியர்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப் படுத்தபோவதில்லை” என்று தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

December 10, 2011 at 6:31 pm

ரஷ்யாவில் பூடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

leave a comment »

OurUmmah: ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, ஐரோப்பிய கண்காணிப்பு அமைப்பு கூறியதையடுத்து, நேற்று, தலைநகர் மாஸ்கோவில், ஆயிரக்கணக்கானோர் பிரதமர் விளாடிமிர் பூடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் . ஐரோப்பிய அமைப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும், ரஷ்ய தேர்தலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.ரஷ்யாவில், கடந்த 4ஆம் திகதி  பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. Read the rest of this entry »

Written by poralikall

December 7, 2011 at 8:59 pm

எகிப்தில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் பெற்ற இஸ்லாமிய வாக்குகள் எத்தனை வீதம் ?

with 12 comments

அஹ்மத்ஷா அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அதி கூடிய வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றது .எகிப்து தேர்தல் சம்மந்தமாக சரியான புரிதலுக்கு செல்வதற்கு முன்னர் சுருக்கமாக எகிப்து தேர்தல் களத்தில் உள்ள சில கட்சிகளை பற்றிய அறிமுகத்தை தந்து அதன் பின் தேர்தல் முடிவுகள் பற்றி பார்க்கலாம். Read the rest of this entry »

Written by poralikall

December 6, 2011 at 8:34 pm

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள்

leave a comment »

OurUmmah: பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் பூர்தியடைகின்றது.  பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது.  விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பயங்கரவாத அமைப்பு “டிசம்பர் 6“  பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட  நாளை வெற்றியின் நாளாக பிரகடனப்படுத்தி பல விழாக்களை ஏற்பாடு செய்து  நடத்தி வருகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

December 5, 2011 at 9:58 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 33 other followers